ஆப்நகரம்

ஆந்திராவில் 1068 ஆம்புலன்ஸ் சேவை: தொடங்கி வைத்தார் ஜெகன் மோகன்

உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய 1068 ஆம்புலன்ஸ்களின் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் துவக்கி வைத்தார்.

Samayam Tamil 1 Jul 2020, 11:12 am
கொரோனா தொற்று அதிகரித்துவரும் தற்போதைய நிலையில் பல்வேறு வகையான உயிர் காக்கும் வசதிகளுடன்கூடிய 1068 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் துவக்கி வைத்தார்.
Samayam Tamil ambulance service


இதற்காக உயிர்காக்கும் பல்வேறு வசதிகளுடன் கூடிய 414 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 108,104 ஆகிய அடையாளங்களுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களும் உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களாக தரம் உயர்த்தப்பட்டன.

அவற்றில் 26 ஆம்புலன்ஸ்கள் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஆக மொத்தம் 1068 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் துவக்கி வைத்தார்.

ஆடுகளுக்கு கொரோனாவா? கர்நாடகாவில் புதிய அச்சம்!

அப்போது பேசிய அவர், “அவசர காலங்களில் பொதுமக்கள் போன் செய்தால் நகர்ப்புறங்களில் 15 நிமிடத்திலும், கிராமப்புற பகுதிகளுக்கு 20 நிமிடத்திலும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு 30 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ்கள் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 108, 104 ஆகிய எண்களுக்கு போன் செய்து பொதுமக்கள் ஆம்புலன்ஸ் தேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

அடுத்த செய்தி