ஆப்நகரம்

Vizag gas leak: இடம் மாற்றப்படும் எல்.ஜி.பாலிமர்ஸ்?

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

Samayam Tamil 8 May 2020, 6:29 pm
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், இதுவரை 11 பேர் பலியாகியும் உள்ள நிலையில் இதற்குக் காரணமான எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனத்தின் ஆலையை இடமாற்றம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி ஆகியவை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
Samayam Tamil lg polimers factory, visakhapatnam


விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடபுரம் பகுதியில் இயங்கி வரும் பாலிமர் (கடினமான பிளாஸ்டிக்) ஆலையிலிருந்து நேற்று (மே.7) விஷவாயுக்கசிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலையிலிருந்து கசிவு ஏற்பட்டது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சமர்ப்பிக்கபட்ட அறிக்கை மீதான விசாரணை இன்று தொடங்கியது.

இந்நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகைகளும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 1.கோடி நிவாரணமும் அறிவித்துள்ளார்.

மேலும், தேவைப்பட்டால் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனத்தை இடமாற்றவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமின்றி, ஆலைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் 15,000 மக்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி