ஆப்நகரம்

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம்..! - அரசு அறிவிப்பு

ஆந்திராவில் கொரோனவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Jul 2020, 8:54 pm
ஆந்திராவில் இன்று வரை 27 ஆயிரத்து 235 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14,393 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 12,533 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil andhra corona precautions


மக்கள் தொகை அதிகம் உள்ள ஆந்திராவில் கொரோனா பரவலை தடுக்க ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அறிவித்துள்ளார்.

மக்களுக்கான முதல்வர் என்று அம்மாநில மக்களால் அங்கீகரிக்கப்படும் ஜெகன் மோகன் பல்வேறு நல திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருபவர். ஊரடங்கு காலத்தில் 10 ஆம் வகுப்பு போது தேர்வை ரத்து செய்த முதல் மாநிலமாகவும் ஆந்திரா திகழ்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு கிளாஸ்தான்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை பெறுவதன் மூலமாக நோயாளிகளும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதாலும், விரைவில் குணம் அடைய வாய்ப்புகள் உள்ளன என்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உண்டான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக ஆந்திரா அரசு வழங்கி வருகிறது.

அடுத்த செய்தி