ஆப்நகரம்

கல்லீரல் பாதித்த சிறுமிக்கு ஆந்திர முதல்வர் ரூ.30 லட்சம் நிதியுதவி

கல்லீரல் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தைக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

TOI Contributor 25 Jun 2016, 6:04 pm
ஐதராபாத்: கல்லீரல் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தைக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil andhra pradesh cm helps baby liver problem
கல்லீரல் பாதித்த சிறுமிக்கு ஆந்திர முதல்வர் ரூ.30 லட்சம் நிதியுதவி


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மொலகலசெருவாவைச் சேர்ந்தவர் ரமணப்பா. தனியார் மளிகை கடையில் உதவியாளராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி சரஸ்வதி மற்றும் எட்டு மாதக் குழந்தை ஞான சாய் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது குழந்தைக்கு திடீரென கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது மகளை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு சிகிச்சைகாக சுமார் ரூ.50 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர். ஏழைத் தொழிலாளியான அவர், இவ்வளவு தொகை கொடுத்து செலவு செய்ய முடியவில்லை. இதையடுத்து தனது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, தம்பல்லபல்லே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, உடனடியாக மருத்துவ செலவிற்காக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தை ஞான சாய்க்கு, அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளது.

அடுத்த செய்தி