ஆப்நகரம்

ஆந்திராவில் நடந்தேறிய அதிர்ச்சி: நடுரோட்டில் ஒருவர் வெட்டிக் கொலை

ஆந்திரா மாநிலத்தில், பட்டப்பகலில் பலர் பார்க்க, கண் முன்னே, நடுரோட்டில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 May 2017, 4:57 pm
ஆந்திரா மாநிலத்தில், பட்டப்பகலில் பலர் பார்க்க, கண் முன்னே, நடுரோட்டில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil andhra pradesh man brutally stabbed to death in broad daylight in kadapa
ஆந்திராவில் நடந்தேறிய அதிர்ச்சி: நடுரோட்டில் ஒருவர் வெட்டிக் கொலை


அங்குள்ள கடப்பா பகுதி, ஏராளமான கொலைக்குற்ற சம்பவங்களுக்குப் பெயர் போனதாகும். இந்நிலையில், இன்று காலை புரோதாதுர் என்ற ஊரில், நடுரோட்டில் நடந்துசென்ற நபரை 2 பேர் திடீரென வழிமறித்தனர். அவரை கீழே தள்ளி ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்றொரு நபர் சராமரியாக வெட்டிக் கொன்றார்.

பலர் கண் முன்னே, என்ன செய்வது என்றே யோசிக்கும் முன்பாக, இந்த கொலை நிகழ்ந்தேறியுள்ளது. இந்த கொலையை செய்தவர்கள், பின்னர் இதுபற்றி வீடியோவை வாட்ஸ்ஆப் வழியாகப் பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.



கொல்லப்பட்ட நபரின் பெயர் மாருதி பிரசாத் ரெட்டி என்றும், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த கள்ளக்காதலால் ஆத்திரம் அடைந்த குறிப்பிட்ட பெண்ணின் குடும்பத்தினரை, மாருதி பிரசாத், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, அவர்கள் மேலும் கோபம் அடைந்ததோடு, மாருதி பிரசாத்தை, கொல்ல சதித்திட்டம் தீட்டி, அதனை இன்று காலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

இந்த கொலையை பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்க்க, ஒருவர் மட்டும் ஓடிவந்து தடுக்க முயன்றார். எனினும், அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.

இதுபற்றி கடப்பா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது கொலையாளிகள் மீது வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக, போலீசார் கூறியுள்ளனர்.

எனினும், அண்மைக்காலமாக, ஆந்திராவின் பல்வேறு இடங்களிலும் ரவுடியிசம் அதிகரித்துள்ளதாக, பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

On Thursday morning, A Man was hacked to death on road in Proddatur Town, Kadapa District. The murder video was uploaded by the assailants on WhatsApp later.

அடுத்த செய்தி