ஆப்நகரம்

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ‘ஷாக்’ கொடுத்த ஆந்திரா - மிரள வைத்த பாதிப்பு!

இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தை தொட்டு ஆந்திர மாநிலம் அதிர்ச்சியூட்டியுள்ளது.

Samayam Tamil 30 Jul 2020, 12:52 pm
ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 10,093 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டிலும் அதிகபட்ச பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் 4வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது. தற்போது வரை அம்மாநிலத்தில் 1,20,390 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையில் 8வது இடத்தில் இருக்கிறது.
Samayam Tamil Coronavirus in Andhra Pradesh


நேற்று 65 பேர் பலியான நிலையில் மொத்த எண்ணிக்கை 1,213ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் புதிய பாதிப்புகளில் இரண்டாம் இடத்தில் இருந்த மாநிலத்துடன் 2,376 என்ற அளவிற்கு ஆந்திர மாநிலம் வித்தியாசத்தைக் கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

மதுபிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்; புது ரூட் போடும் மாநில அரசு!

அதேசமயம் கொரோனா பரிசோதனைகளில் மும்முரம் காட்டி வருகிறது. ஒரு மில்லியனில் அதிகபட்ச பரிசோதனைகளை செய்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் 70,584 பரிசோதனைகளைச் செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்மூலமே பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகளவு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் தற்போது வரை 18.2 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரிக்கும் விகிதம் 6.61 சதவீதமாக உள்ளது.

சொட்டு நீர் பாசனத்திற்கு இப்படியொரு சூப்பர் ஐடியா - விவசாயிக்கு குவியும் பாராட்டு!

இறப்பு விகிதம் 1 சதவீதமாக பதிவாகியிருக்கிறது. குறிப்பாக கடந்த 30 நாட்களில் ஆந்திர மாநிலத்தில் வைரஸ் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வருகின்றது. இதனால் மாநில அரசு தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி