ஆப்நகரம்

'நீ இப்படி சுத்தும்போது, நா அப்படி சுத்துனோம்' அண்ணாமலை பேச்சுக்கு கர்நாடக முதல்வர் பதில்

மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

Samayam Tamil 31 Jul 2021, 3:46 pm
கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த பின்னர் பாஜக கட்சியில் இருந்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார். இவர் பொறுப்பேற்றதும் செய்தியாளர்களுக்கு கொடுத்த முதல் பேட்டியிலேயே, மேகதாது அணையை குறித்து சபதம் எடுத்துக்கொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil கோப்புப்படம்


காவிரி குறுக்கே அணை கட்டுவதில் முந்தைய முதல்வர் காட்டிய நிலைப்பாட்டை போலவே பசவராஜ் பொம்மையும், '' காவிரி படுகையில் உள்ள உபரிநீரில் கர்நாடக மாநிலத்துக்கு முழு உரிமை உள்ளது என்றும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டியே தீரும் என்றும் அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றியது கவனம் பெற்றது. இது குறித்து பேசிய அண்ணாமலை, மேகதாது அணையை கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்றும் கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு: மாநில அரசு அதிரடி உத்தரவு

மேலும், கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, தஞ்சாவூரில் தமிழக பாஜகவின் விவசாய அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, '' மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக கூறினார்.

அதனை தொடர்ந்து அண்ணாமலையின் பேச்சுக்கு விளக்கமளித்தவர், காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எதிர்ப்பு குறித்து எந்த கவலையும் இல்லை. யாரவது உண்ணாவிரம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும். எனக்கு அதுபற்றி கவலை இல்லை. மேலும், மேகதாது பற்றி அண்ணாமலை பேசியதற்கு பதிலளிப்பது என்னுடைய வேலையும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக திட்டத்தை பாஜகவினரே எதிர்ப்பதும், மத்தியில் ஆளும் பாஜக அதை பார்த்து கொண்டிருப்பதும் வேடிக்கையாக உள்ளதாக நகைக்கின்றனர் அரசியல் பேசுபவர்கள்.

அடுத்த செய்தி