ஆப்நகரம்

Kerala Flood: கேரளாவுக்கு ஆப்பிள் நிறுவனம் ரூ.7 கோடி நிவாரணம்!!

கேரளாவில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் சுமார் ரூ.7 கோடி நிவாரணம் வழங்கி உள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 3:31 pm
கேரளாவில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் சுமார் ரூ.7 கோடி நிவாரணம் வழங்கி உள்ளது.
Samayam Tamil Kerala Flood: கேரளாவுக்கு ஆப்பிள் நிறுவனம் ரூ.7 கோடி நிவாரணம்!!
Kerala Flood: கேரளாவுக்கு ஆப்பிள் நிறுவனம் ரூ.7 கோடி நிவாரணம்!!


கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, கேரளாவின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது, மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பிற்கு உதவும் விதமாக, பல மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதிலும், மலையாள நடிகர்களைக் காட்டிலும், தமிழ் நடிகர்கள் அதிக அளவில் கேரளாவிற்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் ரூ.7 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளப்பெருக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பள்ளிகளை கட்டமைக்கவும் உதவும் வகையில் மெர்சி கார்ப்ஸ் இந்தியா மற்றும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.7 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, கேரளா வெள்ளப்பாதிப்பிற்கு நிதி திரட்ட, தங்கள் iTunes மற்றும் App Store இல் புதிய வசதி ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி