ஆப்நகரம்

அரசியலில் நேருக்கு நேர்; ஆனால் இந்த விஷயத்தில் - எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளிய சித்தராமையா!

பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் எடியூரப்பாவை முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா புகழ்ந்து பேசியுள்ளார்.

Samayam Tamil 28 Feb 2020, 12:28 pm
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பிறந்த நாள் விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் ஹெச்.டி.குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
Samayam Tamil Yeddi


இந்த நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, எங்கள் அழைப்பை ஏற்று சித்தராமையா கலந்து கொண்டதன் மூலம் இந்த நிகழ்வை மேலும் சிறப்பானதாக்கி இருக்கிறார். இதை நான் எப்போது நினைவில் வைத்துக் கொள்வேன்.

அவர் அரசியல் வேறுபாடுகளை இருப்பினும் நட்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய சித்தராமையா, அரசியல் என்பது வேறு. மனித உறவுகள் என்பது வேறு. எங்கள் அரசியல் வேறுபாடுகளையும், தத்துவங்களையும் தனிப்பட்ட வாழ்வில் நுழைய விட மாட்டோம்.

எடியூரப்பா தானாக உழைத்து இவ்வளவு பெரிய அரசியல்வாதியாகி இருக்கிறார். கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி, அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு எடியூரப்பா தான் முக்கிய காரணம் என்றார். பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், எடியூரப்பா ஒரு போராளி.

அடேங்கப்பா - 180 சேனல்கள், 4.6 கோடி பேர் - வியக்க வைத்த ”நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி”!

தென்னிந்தியாவில் பாஜகவிற்கு கதவுகளை திறந்து வைத்தவர். ஒரு விவசாயியின் மகனாக இருந்து முதலமைச்சராக உயர்ந்து நிற்கும் எடியூரப்பா வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. விவசாயிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி வருகிறார்.

நாட்டிலேயே பூஜ்ய வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் என்றார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசுகையில், சுயநலமின்றி, இடைவிடாது எடியூரப்பா உழைத்துக் கொண்டிருக்கிறார்.

சரிவிலிருந்து பாஜக மீட்டெடுத்து அனைத்து தரப்பினருடமும் கட்சியை கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கலந்து கொண்டார்.

இறுதியாக பேசிய எடியூரப்பா, எங்கள் ஆட்சியில் கர்நாடகாவை பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாற்றிக் காட்டுவோம். இந்த தருணத்தில் எனது நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹெச்.என்.ஆனந்த் குமார் நம்மிடையே இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றார்.

அடுத்த செய்தி