ஆப்நகரம்

பாக்., வீரர்கள் 2 பேரை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலில் பொதுமக்கள் 8 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந் நாட்டு வீரர்கள் இரண்டு பேரை, இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

TOI Contributor 1 Nov 2016, 6:03 pm
ஜம்மு: பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலில் பொதுமக்கள் 8 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந் நாட்டு வீரர்கள் இரண்டு பேரை, இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
Samayam Tamil army kills 2 pak jawans in retaliation as 8 die in loc shelling in jk
பாக்., வீரர்கள் 2 பேரை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜௌரி, சம்பா, ஜம்மு ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. முதலில் ஒரு இடத்தில அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து நான்கு முதல் ஐந்து இடங்களில் அத்துமீறியது.

பாகிஸ்தான் படையினரின் அத்துமீறலில் சிக்கி, பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்களின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

உரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் துல்லியத் தாக்குதல் நடத்தினர். இந்த துல்லியத் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

அதேசமயம், கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதியன்று இந்திய ராணுவத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலைத் தொடர்ந்து, இதுவரை 60 முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Army kills 2 Pak jawans in retaliation as 8 die in LoC shelling in J&K

அடுத்த செய்தி