ஆப்நகரம்

மனோகர் பாரிக்கர் ராஜினாமா: அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு!

மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

TNN 14 Mar 2017, 5:12 am
மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil arun jaitley gets charge of defence ministry after manohar parrikar resigns
மனோகர் பாரிக்கர் ராஜினாமா: அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு!


கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாத சூழலில், மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பாஜக.,வே ஆட்சியமைக்க உள்ளது. இதற்கான அழைப்பை, மனோகர் பாரிக்கருக்கு, கோவா ஆளுநர் விடுத்துள்ளார்.

இதையடுத்து, மனோகர் பாரிக்கர், தனது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவருக்குப் பதிலாக, அந்த பொறுப்பை யார் பார்த்துக் கொள்வார் எனக் கேள்வி எழுந்தது. ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லியே, பாதுகாப்புத் துறையை கூடுதல் பொறுப்பாக, நிர்வகிப்பார் என்று, குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

Shri Arun Jaitley shall be assigned the charge of the Ministry of Defence, in addition to his existing portfolios — President of India (@RashtrapatiBhvn) March 13, 2017
மனோகர் பாரிக்கரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, அருண் ஜேட்லியின் சம்மதத்தைப் பெற்றே, அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Finance minister Arun Jaitley was on Monday given the additional charge of the defence ministry after Manohar Parrikar resigned to take on the new role of Goa chief minister.

அடுத்த செய்தி