ஆப்நகரம்

விவசாயிகள் விளம்பரத்துக்காக போராட்டம் நடத்துகிறார்கள்: மத்திய அமைச்சர்

விவசாயிகள் ஊடக விளம்பரத்துக்காக போராட்டம் நடத்துவதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 2 Jun 2018, 10:01 pm
விவசாயிகள் ஊடக விளம்பரத்துக்காக போராட்டம் நடத்துவதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil union_agriculture_minister_radha_mohan_singh_1527938856_725x725


விவசாயக் கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு ஞாயமான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 7 மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்தப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் பங்கேற்றார். நிகழ்வில் பேசிய அவர், "ஊடகங்களின் தோன்றும் விளம்பரத்துக்காகவே விவசாயிகள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துகிறார்கள்" என்று கூறினார்.

"நாட்டில் 12-14 கோடி விவசாயிகள் உள்ளனர். அவர்களில் சில ஆயிரம் பேராவது ஒவ்வொரு அமைப்பிலும் இருப்பார்கள். அவர்கள் ஊடக வெளிச்சத்திற்காக இது போன்ற செயல்களைச் செய்வார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி