ஆப்நகரம்

புல்வாமா வீரர்கள் பற்றி பிரசாந்த் பூஷண் சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் வரவேற்பு!

புல்வாமா தாக்குதல் பற்றி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளங்கள் பிரிவின் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா வரவேற்றுள்ளார்.

Samayam Tamil 16 Feb 2019, 4:41 pm
புல்வாமா தாக்குதல் பற்றி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். அதனை காங்கிரஸ் தலைமை நிர்வாகி ஒருவர் வரவேற்றுள்ளார்.
Samayam Tamil 1550301018-Prashant_Bhushan_IANS_3


ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் பற்றி ட்விட்டரில் கருத்து கூறிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். "புல்வாமாவில் தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் ராணுவத்தினரால் தாக்கப்பட்ட பின்புதான் பயங்கரவாதியாக மாறினார். காஷ்மீரில் பல இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறி சாக விரும்புவது ஏன் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல தற்கொலைப் படை தாக்குதல்களுக்குப் பின்பும், அமெரிக்க படைகளால் கூட அவற்றைத் தடுக்க முடியவில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கடந்த பின் பயங்கரவாதிகளின் தரப்பை ஞாயப்படுத்தும் விதமாக பிரசாந்த் பூஷணின் கருத்து அமைந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளங்கள் பிரிவின் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா பிரசாந்த் பூஷண் கருத்தை வரவேற்றுள்ளார்.

அடுத்த செய்தி