ஆப்நகரம்

பள்ளிக் கல்விக் கட்டணம் 25 சதவீதம் கட் : மாநில அரசு அதிரடி உத்தரவு!!

பள்ளி மாணவர்களுக்குமான கல்விக் கட்டணத்தில் 25 சதவீத்தை குறைக்க வேண்டும் என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அஸ்ஸாம் மாநில அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 14 Aug 2020, 11:20 pm
கொரோனா அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இவை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் இன்னும் உறுதியான முடிவுகளை எடுக்கவில்லை.
Samayam Tamil assam


அதேசமயம், நடப்பு கல்வியாண்டுக்கான (2020 -21) வகுப்புகள் ஆன்-லைன் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த வகுப்புகளை வீட்டில் இருந்தபடியே பயில்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பாடங்களை படித்தாலும், தனியார் பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகங்கள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை குறைத்ததாக தெரியவில்லை. மாணவர்களின் ஆன்-லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசும் அவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக இதுநாள்வரை எந்த உத்தரவும் பிறப்பித்ததாகவும் தெரியவில்லை.

குட்டியுடன் குடியிருப்புக்குள் நுழைந்த காண்டாமிருகம்... நெஞ்சை உருக்கும் வீடியோ!!

இந்த நிலையில், அஸாம் மாநில அரசு இன்றொரு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், " நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 25 சதவீதத்தை தனியார் பள்ளிகள் குறைத்து கொள்ள வேண்டும்.

கடந்த மே மாதம் முதல் பள்ளிகளை திறக்கும்வரை எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களிடமும் 25 சதவீதம் குறைவாகவே கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்" என்று அஸ்ஸாம் மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனாவுடன் கனமழை, வெள்ளத்தால் அஸ்ஸாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

அடுத்த செய்தி