ஆப்நகரம்

பெற்றோரை கைவிட்டால் சம்பளம் அவ்வளவுதான்: அமலானது புதிய சட்டம்!

பெற்றோரை தவிக்கவிட்டால், அவர்களது சம்பளம் அவ்வளவு தான் என்ற வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

TNN 16 Sep 2017, 8:57 am
திஸ்பூர்: பெற்றோரை தவிக்கவிட்டால், அவர்களது சம்பளம் அவ்வளவு தான் என்ற வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil assam govt new law for parents
பெற்றோரை கைவிட்டால் சம்பளம் அவ்வளவுதான்: அமலானது புதிய சட்டம்!


வயதான பெற்றோர்களை தவிக்கவிடுவது பலரது வாடிக்கையாக உள்ளது. அவர்களில் சிலர் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.

இது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இதனை மாற்றும் வகையில் அசாம் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

அதன்படி, வயதான பெற்றோர்களை வருமானம் அதிகம் பெற்றும் முதியோர் இல்லத்தில் சேர்த்தால், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அரசு ஊழியர்களிடம் இந்த சட்டம் அமல்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளுக்கும் இதேபோல் சட்டம் பிறப்பிக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.

Assam Govt new law for parents.

அடுத்த செய்தி