ஆப்நகரம்

திருப்பதி கோயில் சொத்து விவகாரம்; நீதிமன்றத்தில் தேவஸ்தானம் பதில்!

திருப்பதி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் விற்கப்படுவது தொடர்பாக நீதிமன்றத்தில் தேவஸ்தானம் பதில் அளித்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 10:54 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையானிற்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. இவற்றில் 50 சொத்துக்களை விற்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திர மாநில பாஜக மூத்த தலைவர் அமர்நாத், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Samayam Tamil Tirupati


அதில் திருப்பதி கோயில் சொத்துக்களை விற்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில் ஆந்திர அரசின் தலையிட்டால் தேவஸ்தான முடிவு தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஏழுமலையான் கோயில் சொத்துக்களை விற்க வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல - தேவஸ்தான நிர்வாகம் முடிவு

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் தேவஸ்தானம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ஏழுமையானுக்கு சொந்தமான 50 சொத்துக்களை விற்க கடந்த 2016ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை ரத்து செய்து கடந்த மே மாதம் ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டது. எனவே கோயில் சொத்துக்களை வருங்காலத்தில் விற்க மாட்டோம். திருப்பதி கோயில் சொத்துக்களை பாதுகாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இதில் 1974ஆம் ஆண்டு முதல் விற்கப்பட்ட சொத்துக்களின் விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி