ஆப்நகரம்

அயோத்தியில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை

அயோத்தியில் ராமருக்கு சிலை அமைக்கப்படும் தகவலை, உத்தரப் பிரதேச மாநில அரசு உறுதி செய்துள்ளது.

Samayam Tamil 25 Nov 2018, 1:06 pm
உத்தரப் பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டரில் சிலை அமைக்க திட்டம் தயார் நிலையில் உள்ளதாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அவானிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ram-statue
அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை- திட்டம் உறுதி


அயோத்தியில் இந்து கடவுள் ராமருக்கு சிலை அமைக்க உத்தரப் பிரதேச அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் உ.,பி மாநில தலைமைச் செயலாளர் அவானிஷ் அவாஸ்தி, ராமருக்கு 22 மீட்டரில் சிலை அமைக்கப்படும் எனவும், அதில் கடவுளின் உருவம் 151 மீட்டர் உயரத்திலும், மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டரிலும் இருக்கும் என அவர் தகவல் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ராமரின் பீடம் பகுதியில் மியூசியம் அமைக்கப்படும் எனவும், இந்த வேலையை தொடங்குவதற்காக ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலை முதல்வரிடம் பெறப்படும் எனவும் அவானிஷ் அவாஸ்தி கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை விட உயரமான சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் அறிவித்தார்.

மேலும், கர்நாடகாவில் காவிரி தாயிக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் ராஜஸ்தானியில் உலகிலேயே பெரிய சிவன் சிலை உதய்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, வல்லபாய் படேல் சிலையை விட உயரமான மராட்டிய வீரர் சிவாஜியின் சிலையை மஹாராஷ்டிரா கட்டமைத்து வருகிறது. இது 2021ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி