ஆப்நகரம்

Ayodhya Temple: இஸ்லாமியர்களுக்கு நோன்பு விருந்து கொடுத்த அயோத்தியக் கோவில்!

மதநல்லிணக்கத்தை கடைபிடிக்கும் விதமாக அயோத்தியாவில் உள்ள கோவிலில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நோம்பு விருந்து வழங்கியுள்ளது.

Samayam Tamil 5 Jun 2018, 3:05 pm
மதநல்லிணக்கத்தை கடைபிடிக்கும் விதமாக அயோத்தியாவில் உள்ள கோவிலில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நோம்பு விருந்து வழங்கியுள்ளது.
Samayam Tamil ayodhya_temple_hosts_iftar_party_1528178141_725x725


அயோத்தியாவில் 500 வருடங்கள் பழமை வாய்ந்த கோவில் சாரீ குஞ்ச். இந்த கோவிலுக்கு மிகஅருகில் பாபர் மசூதி உள்ளது.இந்த கோவிலை சேர்ந்த நிர்வாகிகள் மதநல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில், இஸ்லாமியமக்களுக்கு ரம்ஜான் நோன்பு விருந்து வழங்கியுள்ளனர்.

இந்த விருந்தானது, கோவிலுக்குள் நடந்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும் நிகழ்ச்சியின் போது அயோத்தியாவில் உள்ளஹனுமன்காரி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டலட்டுக்கள் விருந்தினர்களுக்குகொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள்கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து கோவில் பூசாரி கூறியிருப்பதாவது ’கடவுளுக்கு முன் மனிதர்கள்சமமே. இந்து மக்கள், இஸ்லாமியர்கள் என்று யாரும் வித்தியாசம் பார்க்கக்கூடாது. மேலும் இந்த செய்தியை நாங்க எல்லா மக்களுக்கும் சொல்ல நினைத்தோம். இதுபோன்ற நிகழ்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் சில ஆண்டுகளாக இந்த பகுதியில் இந்துக்களுக்கும். இஸ்லாமியர்களுக்கும் இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் இது போன்ற நிகழ்வு நடைபெறவில்லை. ஆனால் தற்போது மீண்டும் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி