ஆப்நகரம்

திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு முந்தைய முக்கிய வைபவம் செப்.15 இல் தொடக்கம்!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விரைவில் தொடக்கவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 15 ஆம் தேதி தொடங்கிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Sep 2020, 8:29 pm
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசித்திப் பெற்ற புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வரும் 19 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை நடைபெறவு்ளது. இதையொட்டி நடைபெறும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 15 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Samayam Tamil tirupathi


பிரம்மோற்சவம் மற்றும் ஆழ்வார் திருமஞ்சனம் ஆகிய வைபவங்களில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனினும் வழக்கமான சாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 300 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்

இந்த நிலையில், 300 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் ஒருநாளைக்கு 10 ஆயிரம் பேர் வீதம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி