ஆப்நகரம்

பாகுபலி கெட்டப்பில் கலக்கும் மத்திய பிரதேச முதல்வர் - அசத்தல் வீடியோ உள்ளே

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாகுபலி கெட்டப்பில் லிங்கத்தை தூக்குவது, சண்டை போடுவது போன்று அவரது தொண்டர்காளால் உருவாக்கப்பட்ட கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

Samayam Tamil 31 Aug 2018, 6:35 pm
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாகுபலி கெட்டப்பில் லிங்கத்தை தூக்குவது, சண்டை போடுவது போன்று அவரது தொண்டர்காளால் உருவாக்கப்பட்ட கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
Samayam Tamil shivraj-singh-chouhan-as-baahubali


மத்திய பிரதேச முதலவராக பாஜக.,வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். பாஜக ஆட்சி குறித்தும், காங்கிரஸ் கட்சியினர் குறித்தும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ம.பி காங்கிரஸ் தலைவர் ஜோதிரத்யா சிந்தியா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடைப் பெற உள்ளது. அதை ஒட்டி இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

பாகுபலியாகிய மத்திய பிரதேச முதல்வர்:2.26 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாகுபலி கெட்டப்பில் அசத்தலாக வந்து லிங்கத்தை தூக்குவது, போரிடுவதுமாக கலக்கலாக தொண்டர்களால் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல் வசனமும் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி