ஆப்நகரம்

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அயோத்தியில் 144 தடை உத்தரவு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 8:52 am
பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அயோத்தி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil babri-masjid-1-1538026103


கடந்த 1992ம் ஆண்டு, இதேநாளில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் நகரில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள சில இந்து அமைப்புகளும், இஸ்லாம் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளன.

இதனால், அசம்பாவிதங்கள் நிகழலாம் என உத்தரப் பிரதேச காவல்துறை அயோத்தி நகரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. போலீசாரை தவிர, துணை ராணுவத்தினர் மற்றும் அதிரடி படையினரும் அயோத்தி நகரில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அயோத்தி நகரில் மொத்தமாக 2500 போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பரபரப்பு நிறைந்த பகுதிகளில் எப்போதும் ரோந்து பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அயோத்தி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி