ஆப்நகரம்

ஒரே நாளில் ஒரே இடத்தில் 2 ரயில் விபத்துகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் இரண்டு விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.

TNN 19 Sep 2017, 9:18 am
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் இரண்டு விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.
Samayam Tamil back to back derailments in the same day at same place in up
ஒரே நாளில் ஒரே இடத்தில் 2 ரயில் விபத்துகள்


உத்தரப் பிரதேச மாநிலம் சிதாபூர் ரயில் நிலையம் அருகே நேற்று (திங்கட்கிழமை) சரக்கு ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதில் யாருக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை.

இதற்குப் பின்பும் ரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தில் இருந்த கோளாறை சரிசெய்வதில் அலட்சியமாக இருந்த காரணத்தால், அதே இடத்தில் புர்ஹ்வாலாவில் இருந்து பலாமா செல்லும் பயணிகள் ரயிலின் எஞ்சின் தடம் புரண்டது.

இந்த மாதம் நடக்கும் 7வது ரயில் விபத்து இதுவாகும். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி மட்டும் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம் என மூன்று இடங்களில் ரயில்கள் தடம்புரண்டிருக்கின்றன.
UP: Engine of a goods train derails near Sitapur. Burhwal-Balamau passenger train engine also derailed at the same spot yesterday pic.twitter.com/6cf4pzGscE — ANI UP (@ANINewsUP) September 19, 2017 தொடர் ரயில் விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா கடிதம் அளித்த முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது வர்த்தக அமைச்சரவை பொறுப்பை கவனிக்கிறார். புதிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதவியேற்ற உடனேயே இந்த ஆண்டுக்குள் 2000 கிமீ தொலைவுக்கு தண்டவாளங்களை பழுது நீக்க சீர் செய்யும் பணி முடிப்பதாக அறிவித்தார். ஆனால், எந்த மாற்றமும் இல்லாமல் ரயில் விபத்துகள் தொடர்வதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அடுத்த செய்தி