ஆப்நகரம்

வேலையை விட்டுவிட்டு அரசியல் கட்சி தொடங்கும் முன்னாள் ஐஐடி மாணவர்கள்

இந்தியாவின் பல்வேறு ஐஐடி கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 பேர், வேலையை உதறிவிட்டு புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளனர்.

Samayam Tamil 23 Apr 2018, 12:17 pm
இந்தியாவின் பல்வேறு ஐஐடி கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 பேர், வேலையை உதறிவிட்டு புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளனர். ’பகுஜன் ஆசாத் கட்சி’ என்ற பெயருக்கு அங்கீகாரம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil Bahujan-Azad-party
புதிய அரசியல் கட்சி தொடங்கும் ஐஐடி முன்னாள் மாணவர்கள்


ஐஐடி முன்னாள் மாண்வர்களின் இந்த கட்சி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சிகான கொள்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கட்சியை வழிநடத்தும் பிரவீன் குமார் பேசும்போது, அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. ஆனால் 2020ம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம் என்று கூறினார்.

ஐஐடி முன்னாள் மாணவர்கள் தங்களது பகுஜன் ஆசாத் கட்சி-க்கு அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பெரியார், அப்துல் கலாம் போன்றவர்களை வழிகாட்டும் தலைவர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

தற்போது இந்த கட்சிக்கான பிரசாரங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எனினும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் பகுஜன் ஆசாத் கட்சிக்கு ஆதரவு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்

அடுத்த செய்தி