ஆப்நகரம்

கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அடிப்போம்: பஜ்ரங் தளம் மிரட்டல்!

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்க கூடாது என பஜ்ரங் தளம் மிரட்டல் விடுத்துள்ளது.

Samayam Tamil 4 Dec 2020, 9:51 pm

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மதச்சார்பற்ற நாடான இந்தியாவிலும் கிறிஸ்தவர்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil Bajrang Dal


இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று தேவாலயங்களுக்கு இந்துக்கள் சென்றால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள் என இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பஜ்ரங் தளம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், அந்த அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாலர் மித்து நாத் பேசியபோது, “கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்துக்கள் தேவாலயங்களுக்கு போனால் அவர்கள் கடுமையாக அடி வாங்குவார்கள்.

போராடும் விவசாயிகளை தூக்கி போடுங்க: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ஷில்லாங்கில் கிறிஸ்தவர்கள் கோயில்களை பூட்டி வைக்கின்றனர். ஆனால் நாம் அவர்களோடு சேர்ந்து பண்டிகை கொண்டாடி வருகிறோம். இது நடக்கக்கூடாது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். டிசம்பர் 26ஆம் தேதி தலைப்புச் செய்தி என்னவாக இருக்குமென எனக்கு தெரியும்.

ஓரியண்டல் பள்ளியை பஜ்ரங் தளத்தின் ரவுடிகள் சேதப்படுத்திவிட்டனர் என எல்லா செய்தித்தாள்களிலும் செய்தி வரப்போகிறது. ஆனால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்துக்கள் கொண்டாட அனுமதிக்கமாட்டோம்.

நம்மை குண்டர்கள் என ஊடகங்கள் அழைக்கின்றன. நமது இந்து பெண்கள் மீது கை வைத்தாலோ, தொல்லை செய்தாலோ நாங்கள் குண்டர்களாக மாறிவிடுவோம். அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று பேசியுள்ளார்.

அடுத்த செய்தி