ஆப்நகரம்

“பாகிஸ்தான் வாழ்க” போராட்டத்தை அதிரவிட்ட இளம்பெண், மேடைக்கு பறந்து வந்த போலீஸ்!

பெங்களூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, மேடை ஏறி, “பாகிஸ்தான் வாழ்க” எனப் பேச்சைத் தொடங்கிய பெண்ணால் பதட்டம் ஏற்பட்டது...

Samayam Tamil 21 Feb 2020, 11:31 am
நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்கிறது. பல்வேறு மாநிலங்களில் மக்கள் காத்திருப்பு போராட்டங்களை வாரக்கணக்காக நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் 8வது நாளாக இஸ்லாமிய அமைப்புகள் தலைமையில் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil tataatat


குடியுரிமைச் சட்டத் திருத்தம் சுதந்திரத்தைப் பாதிக்கிறது எனத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதியப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே நாட்டில் நடக்கும் இந்த போராட்டங்களில் இஸ்லாமியர்கள் சிலர், இந்து மதத்தை காயப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.

இது தொடர்பாக “சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு போராட்டத்தில் இந்து கடவுள் உருவப் படங்கள் எரிக்கப்பட்டது” என வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வந்தது. இது தொடர்பாகச் செய்தி நிறுவனங்கள் நடத்திய விசாரணையில் அந்த வீடியோ வேறு ஏதோ போராட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதும், அந்த வீடியோ மிகவும் பழையது என்றும் கண்டறியப்பட்டது.

சிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்!

இதுபோல் சிஏஏ போராட்டங்களாலும், போராட்டங்கள் குறித்துப் பரவும் செய்திகளாலும் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பெங்களூரில் நடந்த போராட்டத்தில் தடையை மீறி மேடை ஏறிய பெண் ஒருவர், அங்கிருந்த மைக்கை எடுத்துக் கொண்டு “பாகிஸ்தான் வாழ்க” என முழக்கமிட்டார்.

கர்நாடகாவில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி பெங்களூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அஜாருதின் ஒவைசி கலந்து கொண்டிருந்தார். மேடையில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது தடையை மீறி மேடை ஏறிய மாணவர்கள் அமைப்பு தலைவர் அபுல்யா என்ற இளம்பெண், அங்கிருந்தவர் வைத்திருந்த மைக்கை பறித்து “பாகிஸ்தான் வாழ்க” என முழக்கமிட்டார்.

Fake Alert: மோடி - ட்ரம்ப் சுவரோவியத்தின் மீது சிறுநீர் கழிப்பு? உண்மைப் பின்னணி என்ன?

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோபமடைந்த சிலர் அந்த பெண்ணிடமிருந்த மைக்கை பறித்து கீழே இறங்கி இங்கிருந்து சென்றுவிடு என எச்சரிக்கை விடுத்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மேடைக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது செய்தனர்.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாக மைக் இல்லாமல் கூட்டத்தை நோக்கிப் பேசினார். இதையடுத்து அபுல்யா தேச விரோத செயலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி