ஆப்நகரம்

பங்களா என பெயர் மாற்றப்பட்ட மேற்கு வங்காளம்.!

மேற்குவங்க மாநிலத்திற்கு ‘பங்களா’ என பெயர்மாற்றம் செய்வதற்கான தீர்மானம், அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

TNN 9 Sep 2017, 5:52 pm
மேற்குவங்க மாநிலத்திற்கு ‘பங்களா’ என பெயர்மாற்றம் செய்வதற்கான தீர்மானம், அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil bangladesh state name changes to bangala
பங்களா என பெயர் மாற்றப்பட்ட மேற்கு வங்காளம்.!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ல், மேற்குவங்க மாநிலத்தின் பெயர்மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆங்கிலத்தில் ’பெங்கால்’ எனவும், பெங்காலியில் ’பங்களா’ என்றும் மற்றும் இந்தியில் ’பங்கால்’ என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

ஆனால் இதற்கு மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஒரே மாநிலத்திற்கு மூன்று பெயர்கள் வைப்பது பல குழப்பங்கள் உருவாகலாம் என இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கப்பட்ட்து.

இந்த நிலையில், மீண்டும் பெயர் மாற்றத்திற்கான திருத்தம் செய்யப்பட்ட தீர்மானம் நேற்று மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் அனைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி இனி ’மேற்கு வங்காளம் அனைத்து மொழிகளிலும் பங்களா என்னும் பெயரால் அழைக்கப்படும்’. தற்போது இந்த சட்டவரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Bangladesh state name changes to bangala.

அடுத்த செய்தி