ஆப்நகரம்

'பாதுகாப்பு படையினரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது' - ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி!

கல்வான் மற்றும் தவாங் பகுதியில், இந்திய பாதுகாப்பு படையினரை எவ்வளவு புகழ்ந்தாலும், அது போதாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்

Authored byVelayuthan Murali | Samayam Tamil 17 Dec 2022, 4:37 pm

ஹைலைட்ஸ்:

  • 'பாதுகாப்பு படையினரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது'
  • ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Rajnath Singh
ராஜ்நாத் சிங்
கல்வான், தவாங்கில் இந்தியப் படைகள் வெளிப்படுத்திய தைரியம், வீரம் பாராட்டுக்குரியது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் என்ற எல்லைப் பகுதியில், இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடந்த 9 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சீன வீரர்களை, இந்திய ராணுவத்தினர் அடித்து விரட்டினர்.
இந்த விவகாரம் குறித்து, நடப்பு நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விளக்கம் அளித்து விட்டார். ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து வருகின்றன. இதே போல், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி கிழக்கு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்திற்கும், சீன படைக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கல்வான், தவாங்கில் இந்தியப் படைகள் காட்டிய வீரம் பாராட்டுக்குரியது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
கல்வானிலும், தவாங்கிலும் இந்தியப் படைகள் தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்திய விதத்திற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. நாங்கள் எதிர்க்கட்சியில் உள்ள எந்த தலைவரின் நோக்கத்தையும் கேள்வி கேட்கவில்லை. கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம்.
'நாட்டுக்கே ராகுல் காந்தி பெரும் அவமானம்' - கிரண் ரிஜிஜூ அட்டாக்!
அரசியல் என்பது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பொய்யை வைத்து நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது. சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் முறையே அரசியல் என்று அழைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்தியா உலக அரங்கில் நிகழ்ச்சி திட்டங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Velayuthan Murali
நான் மு.வேலாயுதன். MBA பட்டதாரி. பத்திரிகை துறை மீது ஆர்வம் கொண்ட நான், 17வது வயதில், அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைத்தேன். சுமார் 5 ஆண்டுகள் கடந்த பயணம், என்னை, காட்சி ஊடகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு 2 ஆண்டுகள் தொடர்ந்த பயணம், என்னை, டிஜிட்டல் ஊடகத்திற்கு அழைத்து வந்தது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான நடப்பு செய்திகளை எழுதி வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் சமரசம் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி