ஆப்நகரம்

காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...பூமியின் சொர்க்கத்தில் இடம் வாங்க ஆசை..!

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் இப்போது முதலீட்டாளர்களும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களும் அங்கு நிலம் வாங்க முடியும்.

Samayam Tamil 28 Oct 2020, 9:38 pm
ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் இப்போது முதலீட்டாளர்களும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களும் அங்கு நிலம் வாங்க முடியும்.
Samayam Tamil beautiful places of jammu and kashmir where anyone can buy land
காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...பூமியின் சொர்க்கத்தில் இடம் வாங்க ஆசை..!



நீங்களும் இடம் வாங்கலாம்

புதிய நிலச்சட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளதன் மூலம் காஷ்மீர் நிலங்கள் மீதான காஷ்மீர் மக்களின் ஏகபோக உரிமை முடிவுக்கு வருகிறது. கடந்த ஆண்டு சட்டப்பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதற்கு முன் ஜம்மூ காஷ்மீரில் அசையா சொத்துகளை வெளியாட்கள் வாங்க முடியாது. தற்போதைய சட்டதிருத்தம் மூலம் மாநிலத்தின் நிரந்தர குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.

கொஞ்சி விளையாடும் இயற்கை

எப்போது பார்த்தாலும் துப்பாக்கி சத்தம், வெடிகுண்டுகள், பயங்கரவாத தாக்குதல் என்று மட்டுமே நாம் நினைக்கும் காஷ்மீர் அதற்கு நேர் எதிரானது. அங்கு கொஞ்சி விளையாடும் இயற்கையின் அழகு மனங்களை கொள்ளை கொள்ளும். இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் தன் இயற்கை அழகிற்காக உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவிலும் புகழ் பெற்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய ஜம்மு காஷ்மீர் இயற்கை ஆர்வலர்களையும், சாகசப் பிரியர்களையும் ஒருங்கே மகிழ்விக்கும் இடமாக இருக்கிறது.

அழகுக்கு அழகு சேர்க்கும் இடங்கள்

பிரம்மாண்டமான மலைத் தொடர்கள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள், பனிப்பாறைகள், தோட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. ஆண்டு முழுவதும் ஜம்மு காஷ்மீரை சுற்றிப் பார்க்கலாம் என்றாலும் மார்ச் முதல் அக்டோபர் வரையில் பயணப்படுவதே உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதங்களில் நிலவும் மிதமான தட்பவெட்ப நிலை சுற்றுலாவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

கண்ணை கவரும் தோட்டங்கள்

கலைப்பிரியர்களால் விரும்பப்படும் அமர் மஹால் அருங்காட்சியகமும், டோக்ரா அருங்காட்சியகமும் ஜம்முவின் முக்கியமான அருங்காட்சியகங்களாகும். தெளிவான நீர்நிலைகள், மலைகள், ஏரிகள், மிதமான தட்பவெட்பநிலை ஆகியவை காஷ்மீர் பள்ளத்தாக்கின் சிறப்பம்சங்களாகும். அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் தோட்டங்கள், செர்ரி தோட்டங்கள், காஷ்மீர் கைவினைப் பொருட்கள் ஆகியவை தனிச்சிறப்புகளாகும். குல்மார்க், கார்கில் ஆகிய இடங்கள் தங்கள் இயற்கை அழகிற்காக புகழ்பெற்றவை.

பளிங்கு நீரோடைகள்

தால் ஏரி மற்றும் நாகின் ஏரி ஆகியவை இப்பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஏரிகளாகும். பழங்கால கட்டிடங்கள், அரண்மனைகள் மற்றும் மலையேற்றத்திற்காக லடாக் பகுதி புகழ்பெற்று விளங்குகிறது. சர்ச்சைக்குரிய பாங்காக் ஏரி அமைந்திருக்கும் லடாக், கலாசாரத்திற்காகவும், இயற்கை அழகிற்காகவும் போற்றப்படுகிறது. இதுதவிர புகழ்பெற்ற மத ஸ்தலங்களும் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளன.

அடுத்த செய்தி