ஆப்நகரம்

பிச்சை எடுப்பது குற்றமல்ல: மத்திய அரசு

பிச்சை எடுப்பது குற்றமல்ல என்று மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கும் "வறுமையில் உள்ளவர்கள் பாதுகாப்புச் சட்டத்தில்" கூறப்பட்டுள்ளது.

PTI 28 Feb 2016, 3:03 pm
புதுதில்லி: பிச்சை எடுப்பது குற்றமல்ல என்று மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கும் "வறுமையில் உள்ளவர்கள் பாதுகாப்புச் சட்டத்தில்" கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil begging is not a crime centre
பிச்சை எடுப்பது குற்றமல்ல: மத்திய அரசு


வறுமை நிலையில் உள்ளவர்களை பாதுகாக்கும்,"பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2015" என்ற புதிய சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், வறுமை நிலையில் கீழ் இருப்பவர்கள் என, கைவிடப்பட்டவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தங்க இடம் இல்லாதவர்கள், பிச்சை எடுப்போர், மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். அந்த மையங்களில் பயிற்றுவிக்கப்பட்டப் போதியப் பணியாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுதவிர தொழில் பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்தனியே மையங்களை உருவாக்க வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை உருவாக்க வேண்டும் என்பன பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பிச்சை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை கைவிடவும் வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி