ஆப்நகரம்

மேற்கு வங்கம்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, விசாரணைக் கைதி குண்டு வீசி தப்பியோட்டம்!

கொல்கத்தா: மிட்னாபூர் சிறையில் இருந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விசாரணைக் கைதியை அழைத்துச் சென்ற போது, போலீசார் மீது குண்டுவீசி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்றான்.

Ei Samay 4 Oct 2018, 5:25 pm
Read in Bengali
Samayam Tamil Kanthi (3).


மேற்கு வங்க மாநிலம் மஹிஷாதல் பகுதியில் நாப்குமார் ஹைத் என்ற போலீஸ் அதிகாரி சமீபத்தில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கரண் பேரா என்ற நபரைப் போலீசார் கைது மிட்னாபூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கரண் உட்பட 4 பேரை, கிழக்கு மிட்னாபூர் கந்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். இன்று காலை 11.30 மணியளவில் நீதிமன்றம் அருகே சென்ற போது, திடீரென துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்த போலீசார் மீது கரண் தாக்குதல் நடத்தியுள்ளான்.

அதில் சுஷாந்தா ராணா என்ற அதிகாரி காயமடைந்தார். இதையடுத்து குண்டுவீசி தாக்குதல் நடத்தினான். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் பைக்கில் வந்த சில நபர்களுடன் கரண் தப்பித்துச் சென்றுள்ளான்.

கைதி துப்பாக்கிச்சூடு நடத்தி குண்டு வீசி தப்பியோட்டம் - வீடியோ!

இதனைத் தொடர்ந்து காயமடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் 2 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கரண் பேரா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.

Bengal Prisoner escapes after exploding bombs.

அடுத்த செய்தி