ஆப்நகரம்

பெங்களூருவில் 115 ஆண்டுகளில் இல்லாத மழை

பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் நல்ல மழை பெய்யும்.

TOI Contributor 15 Oct 2017, 12:55 pm
பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் நல்ல மழை பெய்யும்.
Samayam Tamil bengaluru records highest rainfall in at least 115 years
பெங்களூருவில் 115 ஆண்டுகளில் இல்லாத மழை


பருவநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் வறட்சி நிலவியது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த 2 மாதமாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

இந்த மழைக்கு வெள்ளத்தால் 9 பேர் பலியானார்கள். குறிப்பாக பெங்களூருவின் மேற்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
வெள்ளப்பகுதிகளை அரசியல் கட்சி தலைவர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சா் சதானந்த கவுடா ஆகியோர் சுவர் இடிந்து பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பெங்களூருவில் 115 ஆண்டுக்குப்பின்பு வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 16.15 செ.மீ. மழை கொட்டியது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு 16.06 செ.மீ. மழை பெய்தது. இதுதான் அதிகபட்ச மழை அளவாக இருந்தது.

இந்த நிலையில் அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தின் உள்மாவட்டங்களிலும், பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி