ஆப்நகரம்

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு: காரிலேயே லண்டனுக்குப் பயணம்!

உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பையிலிருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் மேற்கொள்ள பால் ஷேகர் சிலனா என்பவர் திட்டமிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Apr 2018, 7:47 am
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பையிலிருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் மேற்கொள்ள பால் ஷேகர் சிலனா என்பவர் திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil india


தங்களது உடல் உறுப்புகளின் மூலம் மரண படுக்கையில் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு தாமாக முன்வந்து தங்களது உறுப்புகளை தானமாக கொடுத்து, அவர்களது உயிரைக் காப்பாற்றுவதே உடல் உறுப்பு தானத்தின் முக்கிய செயல். மனித உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் தானம் செய்யத்தக்கவை அல்ல. சிலவற்றை மட்டுமே தானம் செய்ய இயலும். இதயம், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், குடல், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கருவிழி, தோல், இதயவால்வுகள், இரத்தக்குழாய்கள் முதலிய உறுப்புகள் தானம் செய்யத்தக்கவை.

ஆனால், நாம் அனைவரும் அவ்வாறு உடல் உறுப்பு தானம் செய்கிறோமா என்று கேட்டால், இல்லை என்று சொல்லலாம். இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பால் ஷேகர் சிலனா என்பவர் தன்னுடைய குழுவுடன் இணைந்து மும்பையிலிருந்து லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மும்பையில் தொடங்கும் இந்த பயணம் 14 நாடுகளைக் கடந்து இறுதியில் லண்டன் சென்றடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி