ஆப்நகரம்

நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக்; பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை எச்சரிக்கை!

நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படுவதை அடுத்து, உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 10 Apr 2018, 9:32 am
டெல்லி: நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படுவதை அடுத்து, உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil MHA Security
பாரத் பந்த்


கடந்த 2ஆம் தேதி, எஸ்.சி, எஸ்.டி சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்ட வன்முறை சம்பங்களில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி, நாடு முழுவதும் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. இந்த சூழலில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், அல்வார் ஆகிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபீர் மாவட்டத்தில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Bharat bandh Beef up security, MHA tells states.

அடுத்த செய்தி