ஆப்நகரம்

என் அம்மா... எனக்கு உயிர்கொடுத்த தெய்வம்! - சுஷ்மா மறைவிற்கு கதறி அழும் ஹமித் அன்சாரி!

சுஷ்மாவால் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்ட ஹமித் அன்சாரி, தனது தாயை இழந்த துயரத்தில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.

Samayam Tamil 7 Aug 2019, 12:41 pm
கடந்த 2012ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பொறியாளர் ஹமித் அன்சாரி, பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவரை பெஷாவர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் இந்தியாவில் இருந்து வந்துள்ள ஒற்றன் என்றும், பாகிஸ்தானில் சட்டவிரோதமாக நுழைந்து குற்றங்கள் புரிந்துள்ளார் என்றும் அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது.
Samayam Tamil Hamid Ansari


மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை மீட்க, அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுத்தார். பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அன்சாரியை மீட்டார். இதையடுத்து அட்டாரி - வாகா எல்லையை கடந்து கண்ணீர் மல்க இந்தியாவிற்குள் நுழைந்தார்.

தனது குடும்பத்தினருடன் இணைந்ததால் பெரு மகிழ்ச்சி அடைந்த அன்சாரி, சுஷ்மாவை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அன்சாரி, ”என்னை சுஷ்மா மகனே! என்று அழைத்தார். எங்கள் மீது அளவு கடந்த அன்பை காட்டியதை நான் உணர்ந்தேன்.

Also Read:

எனக்கு நீங்க சொன்ன அந்த விஷயம்; நடக்காமலே போச்சே - சுஷ்மா குறித்து ஸ்மிருதி இரானி உருக்கம்!

வழக்கறிஞர், எம்எல்ஏ, முதல்வர், மத்திய அமைச்சர்- சுஷ்மா ஸ்வராஜ் கடந்து வந்த பாதை..!

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் காப்பாற்றுவேன்: சுஷ்மாவின் பாசம்!!

இந்திய இளைஞர்களுக்கு தாய்நாட்டைப் போன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்கிறீர்கள்” என சுஷ்மாவிடம் கூறியதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

இதுபற்றி ஏ.என்.ஐ செய்தியாளர்களிடம் பேசிய ஹமித் அன்சாரி, ”எனக்கு சுஷ்மா மீது மிகுந்த மரியாதை உண்டு. என்றும் எனது மனதில் அவர் இருப்பார். எனக்கு தாய் போன்றவர். பாகிஸ்தானில் இருந்து நான் திரும்பிய பிறகு, எனக்கு அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டினார். அவருடைய மரணம் எனக்கு பேரிழப்பு” எனக் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி