ஆப்நகரம்

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிதிஷ்குமார் ஆய்வு

பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நிதிஷ்குமார் பார்வையிட்டார்.

TNN 29 Jul 2016, 3:42 am
பாட்னா: பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நிதிஷ்குமார் பார்வையிட்டார்.
Samayam Tamil bihar cm nithish kumar visit flood affected areas
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிதிஷ்குமார் ஆய்வு


பீகார் மாநிலத்தில் கடந்த சில நட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் கங்கை, மகாநன்டா, மெச்சி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மீட்புப்பணிகள், நிவாரணப் பொருட்கள் ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேசிய போரிடர் மீட்புக்குழு வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

பீகார் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி