ஆப்நகரம்

2024 இல் பாஜகவை வீழ்த்த தமிழ்நாட்டு மாடல் கூட்டணி... ராகுலுக்கு தேஜஸ்வி சூப்பர் யோசனை!

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ராகுல் காந்திக்கு அருமையான யோசனையை கூறியுள்ளார் பீகார மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ். 2019 இல் செய்த தவறையே மீண்டும் செயயக்கூடாதென எதிர்க்கட்சிகளுக்கும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Samayam Tamil 12 Sep 2022, 9:33 pm

ஹைலைட்ஸ்:

  • 2024 மக்களவைத் தேர்தல்
  • பாஜகவை வீழ்த்த தேஜஸ்வி யாதவ் சூப்பர் யோசனை
  • செவிசாய்ப்பாரா ராகுல் காந்தி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல்
ராகுலுக்கு தேஜஸ்வி யாதவ் யோசனை
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் களமிறங்கி உள்ளார் பிகார் முதல்வுரும், பாஜக கூட்டணியில இருந்து அண்மையில் வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கடசித் தலைவருமான நிதீஷ் குமார். 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் என்றும், எதிர்க்கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பிறகு பார்த்து கொ்ள்ளலாம் எனவும் அவர் கூறி வருகிறார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முதல் முயற்சியாக அண்மையில் டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சநதித்து தமது மாஸ்டர் பிளான் குறித்து பேசியுள்ளார்.

இப்படி நிதீஷ் குமார் ஒரு பக்கம் பாஜகவை வீழ்த்த யூகங்களை வகுத்து வர, இல்லை...இல்லை... பாஜகவை என்னிடம் விட்டுங்க... அவங்களை நான் பாத்துக்குறேன் என்று சினங்கொண்ட சிறுத்தையாய் மறுபுறம் கொந்தளித்து கொண்டிருக்கிறார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்.

2024 இல் பாஜகவை தோற்கடிக்க இவ்வாறு ஆள் ஆளுக்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்க, எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை மண்ணை கவ்வ செய்ய, காங்கிரஸுக்கு அருமையான யோசனையை அளித்துள்ளார் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்.

ஆர்எஸ்எஸ் டவுசரில் தீ வச்ச காங்கிரஸ்: மக்களவைத் தேர்தலுக்கு புது ரூட்டில் பயணம்!
Simple But Powerful எனும் படியான அவரது யோசனை இதுதான். மாநில கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் அவர்களுக்கு வழிவிட வேண்டும். பீகாரில் அமைந்துள் மெகா கூட்டணியை போல நாடு முழுவதும் உருவாக வேண்டும். 2019 இல் செய்த தவறை 2024 லும் மாநிலக் கட்சிகள் செய்யக்கூடாது என்பதுதான் தேஜஸ்வி யாதவ்.

'மாநில கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் அவர்களுக்கு வழிவிட வேண்டும்' என்பதுதான் தேஜஸ்வியின் யோசனையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அதாவது, என்னதான் இந்தியாவை ஆண்ட கட்சியாக இருந்தாலும், இன்றும் தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க தம்மைவி்ட்டால் வேறு கட்சி இல்லை என்ற நிலையில் காங்கிரஸ் இருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சி திமுகவுடன் கூட்டணியில் நீடித்து வருகிறது. அது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி... நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி... திமுக தரும் சீட்களை பெற்றுக் கொண்டு, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்று வருகிறது காங்கிரஸ்.

நானே பாத்துக்குறேன்... பாஜகவ என்கிட்ட விட்ருங்க; கே.சி.ஆர் எடுத்த சபதம்- இது நேஷனல் பாலிடிக்ஸ்!
தற்போது நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள 52 எம்பிக்களில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அதாவது திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கடைப்பிடிக்கும் இந்த கூட்டணி மாடலையே ஆந்திரா, தெலங்கானா, பீகார், ஓடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களிலும் பின்பற்றினால் பாஜகவை எளிதாக வீழ்த்திவிடலாம் என்பதுதான் தேஜஸ்வி யாதவ் சொல்லும் கணக்கு.

மாறாக, 2019 எம்பி எலக்ஷனில் நாட்டிலேயே அதிக எம்பிக்களை (82) கொண்டுள்ள மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் மெகா கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாமல், தனித்து்ப் போட்டியிட்டதால் வாக்குகள் சிகறி அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.

அதேபோன்றே பீகாரிலும் பாஜக -ஐக்கிய ஜனதா தளம் ஓரணியாகவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றொரு அணியாகவும் களம் கண்டது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்த முறை அங்கு பாஜக தனித்துவிடப்பட்டுள்ளதால், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடஙகிய தற்போதைய மெகா கூட்டணி அப்படியே தொடர்ந்தால் 2024 இல் பாஜகவை எளிதாக வெற்றி கொள்ளலாம் என்பதுதான் தேஜஸ்வி யாதவின் திட்டம். இந்த திட்டத்தை ராகுல் காந்தி ஏற்பாரா, கூட்டணி்க்கு வந்தால் மாநில கட்சிகள் காங்கிரஸுக்கு உரிய மரியாதை தருமா என்பதையெல்லாம் பொறுத்திருநதுதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி