ஆப்நகரம்

முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா காலமானார்- பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெகன்னாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் காலமானார்.

Samayam Tamil 19 Aug 2019, 12:21 pm
பீகார் மாநிலத்தில் முதுபெரும் அரசியல்வாதியாக இருந்தவர் ஜெகன்னாத் மிஸ்ரா. இவர் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் அரசியல் ஆதிக்கத்திற்கு முன்பே, அந்த மாநிலத்தை ஆட்சி செய்தவர்.
Samayam Tamil Jagannath Mishra


மூன்று முறை பீகார் முதல்வராக பதவி வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் உயர்மட்ட குழு உறுப்பினராக இருந்தவர். 1970, 80களில் பீகார் மாநிலத்தின் சக்தி வாய்ந்த காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்.

Also Read: எக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை!!

இக்கட்சியில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியில் சேர்ந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம், ஜெகன்னாத் மிஸ்ராவிற்கு மாட்டுத் தீவின ஊழல் வழக்கில் தண்டனை விதித்தது.

Also Read: பள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் பலி!

அதாவது 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 2018 ஜூலை முதல் ஜார்க்கண்ட உயர்நீதிமன்றம் மிஸ்ராவிற்கு தொடர்ந்து ஜாமீன் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 82. ஜெகன்னாத் மிஸ்ரா மறைவிற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு மோடி பெயர் வைக்க வேண்டும்: பாஜக எம்.பி வலியுறுத்தல்!

இதையொட்டி பீகார் மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதை உடன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி