ஆப்நகரம்

பட்டப்படிப்பை முடிக்கும் பெண்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை

இத்திட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறப்பிலிருந்து பட்டப்படிப்பை முடிக்கும் வரை மொத்தம் 54,000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கும் பீகார் அரசின் மற்றொரு திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Samayam Tamil 9 Nov 2018, 3:56 pm
பாட்னா: இந்தி ஆண்டு முதல் பட்டப்படிப்பை முடிக்க அனைத்துப் பெண்களுக்கும் ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்குவதாக பீகார் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil shutterstock_312205169 (1)


பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் ஆறு திட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அவற்றில் ஒரு திட்டமாக 2018ஆம் ஆண்டு முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் அனைத்து பீகார் மாநிலப் பெண்களுக்கும் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.300 கோடி நிதியையும் அந்த மாநில அரசு ஒதுக்க உள்ளது.

இது குறித்து பேசிய பீகார் மாநில அமைச்சரவையின் சிறப்புச் செயலாளர் யு.என்.பாண்டே, “இந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதிக்குப்ப பின் கல்லூரியில் பட்டப்படிப்பை முடிந்த அனைத்து பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.25,000 வழங்கப்படும்.” என்றார். மேலும், இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு தேர்ச்சி விகிதம், சாதி, மதம் அல்லது திருமணமானவரா இல்லையா என்பன போன்ற எந்தக் நிபந்தனைகளும் கிடையாது. எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இத்திட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறப்பிலிருந்து பட்டப்படிப்பை முடிக்கும் வரை மொத்தம் 54,000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கும் பீகார் அரசின் மற்றொரு திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அடுத்த செய்தி