ஆப்நகரம்

பீகார் அரசின் ஏமாற்றுச் செயல்: நக்சலைட்கள் கொன்ற வீரரின் குடும்பத்திற்கு வழங்கிய செக் பவுன்ஸ்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களால் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்திற்கு, பீகார் மாநில அரசு வழங்கிய காசோலை பணமின்றி திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 May 2017, 6:54 pm
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களால் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்திற்கு, பீகார் மாநில அரசு வழங்கிய காசோலை பணமின்றி திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bihar govt insults sukma martyr rs 5 lakh compensation cheque to soldiers family bounces
பீகார் அரசின் ஏமாற்றுச் செயல்: நக்சலைட்கள் கொன்ற வீரரின் குடும்பத்திற்கு வழங்கிய செக் பவுன்ஸ்!

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று நக்சலைட்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது, 24 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வீரமரணம் அடைந்த இந்த 6 வீரர்களின் சடலங்களும், பீகார் மாநிலம் கொண்டுவரப்பட்டபோது, அம்மாநில அரசு சார்பாக ஒரு அமைச்சர் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை.

அதேசமயம், இந்த 6 வீரர்களுக்கும், ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதில், ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற வீரரின் மனைவிக்கு வழங்கப்பட்ட காசோலை, அம்மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து செல்லுபடி ஆகாத காரணத்தால் வங்கியில் இருந்து திரும்பியுள்ளது.

Bihar: The cheque of Rs 5 lakh issued by the Nitish Kumar government to the kin of Sukma attack martyr Ranjeet Kumar has bounced.

அடுத்த செய்தி