ஆப்நகரம்

பீகாரில் பரபரப்பு; லோக் ஜனசக்தி தலைவர் சுட்டுக்கொலை

பீகாரில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த லோக் ஜனசக்தி கட்சியின் மூத்த தலைவர் சுதேஷ் பாஸ்வான் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 May 2016, 10:06 pm
பீகாரில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த லோக் ஜனசக்தி கட்சியின் மூத்த தலைவர் சுதேஷ் பாஸ்வான் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bihar ljp leader sudesh paswan murdered in maoist attack villagers protest
பீகாரில் பரபரப்பு; லோக் ஜனசக்தி தலைவர் சுட்டுக்கொலை

அங்குள்ள துமாரியா பகுதியில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி, லோக் ஜனசக்தி மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரம் நடத்திவருகின்றனர். இதன்ஒருபகுதியாக, லோக் ஜனசக்தியின் தலைவர்களில் ஒருவரான சுதேஷ் பாஸ்வான், அங்கு பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கு வந்த மாவோயிஸ்ட்கள், சுதேஷ் பாஸ்வான் உள்ளிட்டோர் வந்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சுதேஷ் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த உள்ளூர் மக்கள், வாகனங்களுக்கு தீ வைத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகாரில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகவும், அரசியல் தலைவர்கள் படுகொலை அதிகரித்து வருவதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க வேண்டும் எனவும் லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி