ஆப்நகரம்

குடிநீருக்கு பதில் ஆசிட் கொடுத்த நர்ஸ்; துடிதுடித்து இறந்த நோயாளி

பீகாரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாத்திரை சாப்பிடுவதற்கு குடிநீருக்கு பதிலாக ஆசிட்டை கொடுத்ததால், துடிதுடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Feb 2018, 12:42 pm
பீகாரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாத்திரை சாப்பிடுவதற்கு குடிநீருக்கு பதிலாக ஆசிட்டை கொடுத்ததால், துடிதுடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bihar woman dies after hospital gives acid instead of water to drink
குடிநீருக்கு பதில் ஆசிட் கொடுத்த நர்ஸ்; துடிதுடித்து இறந்த நோயாளி

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கோருல் கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளி தேவி (60). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வை குறைபாடு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தொடர்ந்து அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த புதனன்று மாத்திரை போடுவதற்காக ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நரஸ் ஒருவரிடம் குடிநீர் கேட்டுள்ளார்.

அப்போது கவனக்குறைவாக இருந்த நர்ஸ், குடிநீருக்குப் பதிலாக ஆசிட் பாட்டிலை எடுத்துக் கொடுத்துள்ளார். இதை அறியாத சியாமளி தேவியும், மாத்திரைகளை போட்டு விட்டு ஆசிட்டை குடித்துள்ளார்.

தொடர்ந்து ஆசிட் சுட்டிதில் அலறி துடித்த சியாமளி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம், உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி