ஆப்நகரம்

நில மோசடி: சோனியா மருமகன் தொடர்பு நிறுவனத்துக்கு சம்மன்

பைக்கானெர் நில மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடைய நிறுவனத்துக்கு புதிய சம்மன் ஒன்றை இன்று அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

TOI Contributor 1 Jul 2016, 3:59 pm
பைக்கானெர் நில மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடைய நிறுவனத்துக்கு புதிய சம்மன் ஒன்றை இன்று அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
Samayam Tamil bikaner land case ed issues fresh notice to robert vadra linked firm
நில மோசடி: சோனியா மருமகன் தொடர்பு நிறுவனத்துக்கு சம்மன்


ராஜஸ்தான் மாநிலம் பைக்கானெர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் விவசாய நிலங்களை, மிகக் குறைந்த விலைக்கு ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிறுவனத்துடன் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, இதுதொடர்பாக ஏற்கனவே ஒருமுறை அமலாக்கத்துறை அந்த நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் மீண்டும் இன்று புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மன் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு எதிராக அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த மாத துவக்கத்தில் அனுப்பி இருந்த சம்மனில், பைக்கானெர் நிலம் விற்றது, வாங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்குமாறு உத்தரவிட்டு இருந்தது.

கடந்த 2010ல் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் பைக்கானெரில் 69.55 ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தது. குறைந்த விலையில் இந்த நிலம் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்ட பாஜகவினரால் கூறப்பட்டு வருகிறது என்று ராபர்ட் வதேரா மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி