ஆப்நகரம்

ரூ. 200-க்கு மேல் வாங்கும் எந்த பொருட்களுக்கும் 'பில்' கட்டாயம்

ரூ. 200-க்கு மேல் காசு கொடுத்து எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்குரிய ’பில்’ வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என ஜி.எஸ்.டி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Samayam Tamil 1 Feb 2019, 7:08 pm
ரூ. 200-க்கு மேல் காசு கொடுத்து எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்குரிய ’பில்’ வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என ஜி.எஸ்.டி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Samayam Tamil பொருட்களுக்கு ’பில்’ கட்டாயம்: ஜிஎஸ்டி அதிகாரிகள் தகவல்


கடந்த 2017, ஜூலை ஒன்று முதல் நாட்டின் ஜிஎஸ்டி என்கிற சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறை அமலுக்கு வந்தது. இதனடிப்படையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு வரி விதிப்பு பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன்மூலம் பெறப்படும் வருவாய் அரசுக்கு சென்றடையும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை உறுதி சேய்யும் வகையில் பொருட்கள் வாங்கும் போது கடை நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், வணிகர்கள் அனைவரும் அரசுக்கு முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். பலரும் இதை பின்பற்ற தவறுகின்றனர். அப்போது அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வாடிக்கையாளர்கள் ரூ. 200-க்கு மேல் ந்த பொருட்களை வாங்கினாலும், அவர்களுக்கு வணிகர்கள் நிச்சயமாக பின் வழங்க வேண்டும் என ஜிஎஸ்டி அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி