ஆப்நகரம்

பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசிய முன்னாள் முதல்வர்: வலுக்கும் எதிர்ப்பு!

பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர்கமல்நாத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன

Samayam Tamil 19 Oct 2020, 7:49 pm
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள டப்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் இருந்து பாஜகவில் இணைந்தவரும், குவாலியர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
Samayam Tamil ஸ்மிர்தி இராணி
ஸ்மிர்தி இராணி


ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்த போது அவருடன் சேர்ந்து அக்கட்சியில் இணைந்த இமர்தி தேவி, ஜோதிராதித்ய சிந்தியாவின் செல்வாக்கு மிக்க இதே தொகுதியில் இதற்கு முன்னர் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார்.

இதனிடையே, தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், இமர்தி தேவியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு மிகவும் தரக்குறைவாக பேசினார். இதையடுத்து, கமல்நாத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படவுள்ளது.

பஞ்சாபில் எதிர்ப்பை சம்பாதித்த பாஜக; வீழ்ச்சியடைகிறதா மோடி அலை?

இந்த நிலையில், பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசிய கமல்நாத் என்ன விளக்கம் கூறினாலும் அதனை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள ஸ்மிர்தி இராணி, நேரு குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் ஏன் மவுனமாக உள்ளனர். அவர்கள் ஏன் கமல்நாத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, கமல்நாத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “இமர்தி தேவிக்கு மட்டும் ஏற்பட்ட அவமானம் அல்ல. மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த மகள்கள், சகோதரிகளுக்கு ஏற்பட்ட அவமானம். இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸில் இவ்வளவு காலம் பணியாற்றியவருக்கு எதிராக கமல்நாத் இவ்வளவு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்” என கடுமையாக சாடியதுடன் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார்.

அடுத்த செய்தி