ஆப்நகரம்

மாநிலங்களைவை தேர்தல் முடிவு சொல்லும் பாடம் என்ன?

நடந்து முடிந்த 6 மாநில மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் மேலும் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 24 Mar 2018, 8:25 pm
நடந்து முடிந்த 6 மாநில மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் மேலும் உயர்ந்துள்ளது.
Samayam Tamil DMwSvohUEAAFlzn


உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் காலியான 25 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கும் மார்ச் 23ஆம் தேதி (நேற்று) வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மாநிலங்களைவை உறுப்பினார்களாக இருந்த பாஜக உறுப்பினர்கள் 17 பேர் பணி நிறைவு பெற்றனர். ஆனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பாஜக உறுப்பினர்கள் அக்கட்சிக்கு முன்பை விட பலம் சேர்த்துள்ளனர்.

அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியின் 14 மாநிலங்களவை உறுப்பினர்கள் பணி நிறைவு பெற்றனர். ஆனால், புதிதாக 10 உறுப்பினர்களை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது. இதனால் மாநிலங்களவையில் 54 ஆக இருந்த அக்கட்சியின் பலம் 50 ஆகக் குறைந்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகளின் சார்பில் அழுத்தம் திருத்தமாக பேசக்கூடிய எம்.பி.க்கள் ஓய்வு பெற்றுள்ளார். இது பாரதிய ஜனதாவுக்கு சாதகமானதாகும். ஆனால், எதிர்கட்சிகளுக்கு கணிசமான இழப்பாகும். சமாஜ்வாதி கட்சியினர் 6 பேர் பணி நிறைவு பெற்றனர். ஆனால், ஒரே ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள கூடுதல் எம்.பி.,க்கள் எண்ணிக்கை அக்கட்சிக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி அளிப்பதை பெருமளவுக்கு குறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி