ஆப்நகரம்

அதிமுகவிடம் ராஜ்ய சபா எம்.பி தொகுதி ஒன்றை கேட்கும் பாஜக

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் ஒரு இடத்தை தருமாறு அதிமுகவிடம் பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பாஜகவுக்கு எம்பி பதவியை விட்டுக் கொடுப்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுக நிர்வாகிகள் கருதுவதாக தெரிகிறது.

Samayam Tamil 3 Jun 2019, 1:46 pm
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் ஒரு இடத்தை தருமாறு அதிமுகவிடம் பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 64729


வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிகிறது. இதனை அடுத்து விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் உள்ள பலத்தின் அடிப்படையில் அதிமுக மற்றும் திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக தரும் வாய்ப்புள்ளது. எனவே அதிமுகவிடம் 2 இடங்களே இருக்கும்.

இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக, அதிமுகவிடம் இருக்கும் 2 இடங்களில் ஒரு இடத்தை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு எம்பி பதவியை பாஜகவுக்கு வழங்கினால் அதிமுக வசம் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி மட்டுமே மிஞ்சும். இதனால் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பாஜகவுக்கு எம்பி பதவியை விட்டுக் கொடுப்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுக நிர்வாகிகள் கருதுவதாக தெரிகிறது.

அடுத்த செய்தி