ஆப்நகரம்

ஒவைசி நாக்கை அறுப்பவருக்கு ரூ. 1 கோடி: பாஜக தலைவர் அறிவிப்பு

அகில இந்திய மஜில்ஸ் - எ-இதாதுல் முஸ்லிமீன்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதின் ஒவைசியின் நாக்கை துண்டிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச பாஜக தலைவர் ஷ்யாம் பிரகாஷ் திவேதி கூறியுள்ளார்.

TOI Contributor 17 Mar 2016, 11:27 am
அகில இந்திய மஜில்ஸ் - எ-இதாதுல் முஸ்லிமீன்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதின் ஒவைசியின் நாக்கை துண்டிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச பாஜக தலைவர் ஷ்யாம் பிரகாஷ் திவேதி கூறியுள்ளார்.
Samayam Tamil bjp leader calls owaisi traitor announces rs 1 crore reward for cutting his tongue
ஒவைசி நாக்கை அறுப்பவருக்கு ரூ. 1 கோடி: பாஜக தலைவர் அறிவிப்பு


இதற்கிடையே பாரத் மாதா கி ஜெய் என்று கூறாத ஒவைசியின் நாட்டு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று சிவ சேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

''நான் பாரத் மாதா கி ஜெய் என்று கூற மாட்டேன்'' என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைசி கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஷ்யாம் பிரகாஷ் கூறுகையில், ''ஒவைசி ஒரு தேச துரோகி. அவருக்கு பாரத் மாதா கி ஜெய் என்று கூறுவதில் எதாவது மறுப்பு இருந்தால், அவர் நாட்டில் தங்குவதற்கு தகுதியற்றவர். அவருடைய நாக்கை அறுக்க வேண்டும். அப்படி செய்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தில்லியில் அசோகா ரோட்டில் உள்ள ஒவைசியின் வீட்டு முன்பு ''தேசதுரோகி'' என்று எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கூற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், ''எனது கழுத்தில் கத்தி வைத்தாலும் பாரத் மாதா கி ஜெய் என்று கூற மாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் பாரத் மாதா கி ஜெய் என்று கூற வேண்டும் என்று கூறப்படவில்லை. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் பகவத் சகாப்'' என்று ஒவைசி கேட்டு இருந்தார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி