ஆப்நகரம்

அத்வானிக்கு பதிலாக ஜனாதிபதி ஆகிய ராம்நாத் - அசோக் கேலாட்

ஹர்தீக் பாடீல் காங்கிரஸில் இணைந்த பின்னர் குஜராத்தில் படிதார் சமூக மக்களின் ஒருமித்த ஆதரவு காங்கிரஸுக்கே கிடைக்கும் என கருதப்படுகிறது. குஜராத்தில் பாஜகவின் சாம்ராஜ்ஜியம் சரிகிறதா என நடுநிலை விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

Samayam Tamil 18 Apr 2019, 11:02 am
ஹர்தீக் பாடீல் காங்கிரஸில் இணைந்த பின்னர் குஜராத்தில் படிதார் சமூக மக்களின் ஒருமித்த ஆதரவு காங்கிரஸுக்கே கிடைக்கும் என கருதப்படுகிறது. குஜராத்தில் பாஜகவின் சாம்ராஜ்ஜியம் சரிகிறதா என நடுநிலை விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
Samayam Tamil ashok galot


இந்நிலையில் தற்போது ’குஜராத்தில் மக்கள வாக்குகளை கவர பாஜக தலித் சமுதாயத்தினருக்கு பெரிய பதவி வழங்க முடிவெடுத்தது. அதன்படி மூத்த தலைவர் அத்வானிக்கு போக வேண்டிய ஜனாதிபதி பதவியை ராம்நாத் கோவிந்துக்கு கொடுத்தது’ என ராஜஸ்தான் காங்., முதல்வர் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை நான் பாஜகவை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் சொல்லவில்லை. மோடியே இது குறித்து பேசி இருக்கிறார் என்றார்.

பொதுவாகவே பாஜக இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் வகுப்பினருக்கு மட்டுமே கட்சியில் பெரிய பதவிகள் வழங்கி வருகிறது பாஜக என குற்றச்சாட்டு எழுந்தது. அதனை உடைக்கும் வகையிலேயே ராம்நாத் ஜனாதிபதிகாக நியமிக்கப்பட்டார்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகி வெளியேற்றப்பட்ட பின்னர் காங்., முதல்வர் அசோக் கேலாட் பதவி ஏற்றார். தேர்தல் பரபரப்பின்போது, அவரது இந்த கருத்து பாஜகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி