ஆப்நகரம்

டெல்லியில் பாஜக உயர் மட்டக்குழு கூட்டம்

மத்திய அமைச்சரவையில் நாளை மாற்றம் செய்யப்படவுள்ளது. இதையடுத்து டெல்லியில் பாஜக உயர்மட்டக் குழு இன்று நடைபெறுகிறது.

TNN 4 Jul 2016, 3:54 pm
டெல்லி: மத்திய அமைச்சரவையில் நாளை மாற்றம் செய்யப்படவுள்ளது. இதையடுத்து டெல்லியில் பாஜக உயர்மட்டக் குழு இன்று நடைபெறுகிறது.
Samayam Tamil bjp meeting today regarding minister change
டெல்லியில் பாஜக உயர் மட்டக்குழு கூட்டம்


டெல்லியில் நாளை காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து காலை 11 மணியளவில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக பாஜக உயர்மட்ட குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய செயலர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூடி முடிவு செய்ய உள்ளனர்.

அடுத்த செய்தி