ஆப்நகரம்

இன்று தொடங்குகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று தொடங்குகிறது.

TNN 19 Mar 2016, 9:08 am
புதுதில்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று தொடங்குகிறது.
Samayam Tamil bjp national executive meeting starts today
இன்று தொடங்குகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்


தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்கும் தேசிய செயற்குழு கூட்டம், இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும், கூட்டணி அமைப்பது, பிரசார வியூகம் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

ஹரியாணா இடஒதுக்கீடு பிரச்னை, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரம் உள்ளிட்டவைகளை கையில் எடுத்துக் கொண்டு எதிர்கட்சிகள் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது.

எனவே, இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் என்று கூறப்படுகிறது. எனவே, இதனை கையில் எடுத்துக் கொண்டு பாஜக பிரசார யுக்திகளை வகுக்கவும் வாய்ப்புள்ளது.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி